பிரதமர் மோடிக்கு வழங்கிய அன்பளிப்பு பொருட்கள் ஏல விற்பனைக்கு வருகின்றன

பிரதமர் மோடிக்கு வழங்கிய நினைவு பரிசு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் ஏல விற்பனைக்கு வருகின்றன.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பளிப்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வழங்கப்பட்ட ஓவியங்கள், சிலைகள், சால்வைகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் ஆகியவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி கலாசார துறை மந்திரி பிரகலாத் பட்டேல் கூறும்பொழுது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த 2,772 அன்பளிப்பு பொருட்கள் ஆன்லைன் வழியே வருகிற 14ந்தேதி ஏலம் விடப்படும்.

இவற்றில் அன்பளிப்பு மற்றும் நினைவு பரிசாக வழங்கப்பட்ட பொருட்களின் குறைந்தபட்ச விலை ரூ.200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.2.5 லட்சம் ஆகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரியில் நடத்தப்பட்ட ஏலத்தில் பிரதமருக்கு கிடைத்த 1,800 அன்பளிப்பு பொருட்கள் ஏலம் விடப்பட்டு விற்கப்பட்டன. இந்த நிதியானது, கங்கையை சுத்தப்படுத்துவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நமாமி கங்கே திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்