மழை வெள்ளத்தில் சரிந்து விழும் வீடு: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

மழை வெள்ளத்தில் வீடு ஒன்று சரிந்துவிழும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 72 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாட்டில் நிலச்சரிவில் புதையுண்ட 59 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக வீடு ஒன்று இடிந்து விழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள லங்கி கிராமத்தில் ஆற்றின் கரையோரம் இருந்த வீடு ஒன்று மழை வெள்ளம் காரணமாக திடீரென சரிந்து விழுந்தது. அந்த வீட்டில் எத்தனை பேர் இருந்தார்கள், அவர்கள் கதி என்ன ஆனது? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்