ஈராக்கின் புனிதத் தலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

ஈராக்கில் புனிதத்தலத்தில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

ஈராக்கில் உள்ள கர்பாலா என்ற இடத்தில் கி.பி. 680-ல் ஷிடேஷ் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசி உரிமைக்காகக் போராடி உயிர் நீத்த இமாம் ஹுசைன் நினைவிடத்தில் ஆண்டுதோறும் சடங்குகள் நடைபெறுவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான ஷியா முஸ்லீம் யாத்ரீகர்கள் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் முதல் மாதமான முஹர்ரம் 10 ஆம் தேதி வரும் ஆஷூராவுக்காக கர்பாலாவுக்கு பயணம் செய்கிறார்கள்.

மற்றொரு பிரிவு இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டதில் 2004-ம் ஆண்டு 143 பேரும் 2005-ம் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி 950 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டும் நடைமேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தில் மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். அதில், 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து தான் நடைமேடை இடிந்ததாக சடங்குக்கு ஏற்பாடு செய்த புனிதத் தலத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நடைமேடை இடிந்ததால் தான் நெரிசல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்