உடன்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…!

உடன்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

உடன்குடி பேருந்து நிலைய பொது கழிப்பிடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பின்றி நிறுத்திய உடன்குடி வட்டார பகுதிக்கு மினி பஸ் போக்குவரத்தை உடனே இயக்க வேண்டும்.
8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட
உடன்குடி முதல் மெஞ்ஞானபுரம் சாலையை உடனே அமைக்க வேண்டும்.

நயினார்பத்து கிராமம், ஜெ.ஜெ., நகர் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மாநில செயலாளர் மகராஜன் தலைமை வகித்தார் .மாநில நிர்வாக குழு உறுப்பினர் காதர் முகைதீன் வரவேற்றார் . மாநில பொதுச் செயலாளர் க.முகைதீன், மாநில இணைச் செயலாளர் மனோகரன் கண்டன உரை ஆற்றினார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்