தோட்டத்தில் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் பதுக்கல்…!

 

தோட்டத்தில் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் பதுக்கல்…!

தூத்துக்குடி அருகே தோட்டத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவு மூட்டைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பிள்ளைவிளையில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு, கேரளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை, மூட்டையாக பதுக்கிவைக்கப்பட்டுள்ளன.

இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில், மூட்டைகளில் உள்ள உடைந்த பாட்டில்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்துள்ளது.

இந்த கழிவுகளை துரிதமாக அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ள சூழலில், மூட்டைகள் பதுக்கல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்