தூத்துக்குடி அருகே அணையில் குளித்தவர்க்கு நடந்த சோகம்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்துள்ள, கேடிசி நகர், விரிவாக்கப் பகுதியான, “அன்னை”நகரைச் சேர்ந்த, சிவில் என்ஜினியர் ஜெ.ஜெர்ரி பிராங்கோ (வயது 27) என்பவர், அணையில் மூழ்கி உயிர் இழந்தார். விடுமுறை நாளான நேற்று மாலையில், (27-1-2019), தன்னுடைய நண்பர்கள் சிலருடன், தூத்துக்குடி மாவட்டம், “மருதூர்”அணையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஆழமான பகுதியில் சிக்கியதால்,இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இறந்து போனவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லப்பட்டது. முறப்பநாடு போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்