நோய் பரப்பும் உடன்குடி பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடம் கலெக்டரிடம் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மக்களிடம் மனு பெறும் முகாம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்கத்தின் சார்பில் உடன்குடி நகா செய்தி தொடர்புபாளர் கே.வி.மகாராஜன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு : உடன்குடி பேருந்து நிலைய பொது கழிப்பிடத்தை மூட வேண்டி மனுவை சமர்பித்தார் . பேருந்து நிலையத்தில் பயனற்று கிடக்கும் பொது கழிப்பிடத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது . இதனை தூய்மை செய்வது கிடையாது. இதனால் பேருந்து நிலையத்தில் தூர்நாற்றம் வீசுகிறது . இது குறித்து பல முறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்வதில்லை. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ள இக்கழிப்பிடத்தை நிரந்தரமாக மூடி தொற்று நோய் பிடியில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்