மலர்தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர்

டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக இருக்கும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று அணையை திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி காவிரி ஆற்றில் மலர்களையும் தூவினார். முதல்கட்டமாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்