மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது..!

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் அருகே இலவங்கார்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காமராஜ், உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனிடையே காமராஜின் மகன் தாமரைச்செல்வன், தந்தை இறந்ததற்கு காரணம் பணியில் இருந்த மருத்துவர்கள் தான் எனக் கூறி அங்கு பணியில் இருந்த மருத்துவர் பிரபா மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் மருத்துவமனை கண்ணாடிகளையும் உடைத்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாமரைச்செல்வன் மீது நான்கு பிரிவின் கீழ் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தாமரைச் செல்வனை தேடி வந்தனர்.

மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவமனை வளாகம் முன்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்   மேலும் நேற்று முதல் பயிற்சி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர் இந்நிலையில் காவல்துறையினர் தாமரைச் செல்வனை அவரது வீட்டில் இன்று அதிகாலை கைது செய்தனர். இதனால் மருத்துவர்களின் போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்