பூங்கா மற்றும் சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லாத நிலையில் கரூர்

கரூர் நகரில் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லாத நிலையில், பழைய அமராவதி பாலத்திலேயே பூங்கா ஒன்றினை அமைத்து அதிலும், நடைபாதையுடன் பூங்கா ஒன்றினை கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகத்துடன் கரூர் மாவட்ட நிர்வாகம் பணி செய்ய ஆயத்தமாகி, அதற்கான முழு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேரில் ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது, புதிய, அமராவதி பாலத்தினை கட்டிய பிறகு, பழைய பாலம் உபயோகமில்லாமல், இருந்த நிலையில், அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு பூங்கா இல்லாததையடுத்து, கரூர் வைஸ்யா வங்கியின் சி.எஸ்.ஆர் தொகையுடன் ரூ 1 கோடியில், நடைபாதையுடன் கூடிய பூங்கா பொதுமக்கள் பயன்படுத்த நல்ல திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதனால் கரூர் மக்களுக்கு நல்ல பூங்கா பயனுள்ளதாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரும், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன் உடன் இருந்தார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்