ஜம்மு- காஷ்மீர் விவகாரம்: 4 ட்விட்டர் கணக்குள் திடீர் முடக்கம்

ஜம்மு- காஷ்மீர் நிலவரம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிரான நோக்குடன் தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகளை பரப்பியதாக 4 ட்விட்டர் கணக்குள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. அத்துடன் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு  ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் தொடர்பாக இந்தியாவிற்கு எதிரான நோக்குடன் தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகளை பரப்பியதாக 4 ட்விட்டர் கணக்குகள் இடைக்காலமாக முடக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அத்துடன், இதேபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மேலும் 4 ட்விட்டர் கணக்குகள் விரைவில் முடக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்