மகளிர் கல்லூரியில் நடந்த பாரம்பரிய விளையாட்டு திருவிழா…!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள ஆதர்ஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாரம்பரிய விளையாட்டு திருவிழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர். பல்லாங்குழி, தாயம், கண்ணாமூச்சி, கோலிக்குண்டு, கொலகொலயா முந்திரிகா உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

முன்னோர்கள் பயன்படுத்தி வந்த மண்குவளைகள், செப்புக் குடங்கள், வெண்கல பானைகள், மூங்கில் கூடைகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய விளையாட்டுகளை தாங்கள் விளையாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மாணவிகள் தெரிவித்தனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்