சிறுநீரகத்திற்கு ரூ.3 கோடி தருவதாகக் கூறி பண மோசடி செய்த கும்பலைப் பிடிக்க தனிப்படை…!

ஈரோட்டில் 3 கோடி ரூபாய்க்கு சிறுநீரகத்தை வாங்குவதாகக் கூறி பணமோசடி மோசடி செய்த கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு சம்பத்நகரில் இயங்கி வரும் கல்யாணி கிட்னி சென்டர் என்ற தனியார் மருத்துவமனையின் பெயரில் முகநூலில் கணக்கு தொடங்கிய மர்மக்கும்பல் சிறுநீரகத்திற்கு 3 கோடி ரூபாய் தருவதாக விளம்பரம் செய்து அதற்கான பதிவுக்கட்டணம் எனக் கூறி பலரிடம் பணம் வசூலித்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மர்ம கும்பலை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பதிவுக்கட்டணம் பெற்ற வங்கி கணக்கு மிசோரமில் இருப்பது கண்டறியப்பட்டது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இதுவரை புகார் அளிக்க முன்வரவில்லை.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரிய வில்லை. எனவே இதுகுறித்தும் மோசடிக் கும்பல் எந்த ஊரில் இருந்து இணையத்தை பயன்படுத்தி மோசடியை அரங்கேற்றியது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்