வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பும் வனத்துறையினர்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வனப்பகுதிகளில் விலங்குகள் பருகுவதற்காக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான விலங்குகள் உள்ளன.

தற்போது கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வனப்பகுதிகளில் குடித்தண்ணீரை தேடி விலங்குகள் அலைவதை தடுக்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட தொட்டிகளில் தண்ணீரை வனத்துறையினர் நிரப்பி வருகின்றனர். இதன் மூலம் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்படுகிறது.

 

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்