நின்ற லாரி மீது பைக் மோதல்:வாலிபர் பலி

திருநெல்வேலி: நின்ற லாரியின் பின்பகுதியில் பைக்கில் வந்தவர் மோதியதில் ஒருவர் பலியானார்.
திருநெல்வேலி 4 வழிச்சாலையில் சீனிவாசா நகர் அருகே பஞ்சராகி நின்ற லாரி நின்றிருந்தது.

அப்போது லாரியின் பின் விளக்கு எரியாமல் நின்றதால் பைக்கில் வந்த கம்பெனி ஒன்றின் ஊழியர், லாரி மீது மோதியதில் நெற்றியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானா். பலியானவர் வைத்திருந்த ஆதார் அட்டையில் அவர் , சங்கர் நகர் நாரணம்மாள்புரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்