’சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவுக்கு அறுவைச் சிகிச்சை

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கும் அவர், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக இருக்கும் அவரை ’சின்ன தல’ என்று அழைக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாக, இடது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர், 4 முதல் 6 வாரங்கள் ஒய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்