அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிசில் ரபேல் நடால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் மற்றும் மேட்டியோ பெரெட்டினி விளையாடினர்.

முதல் செட் டை-பிரேக் வரை சென்றது. ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்த அந்த செட்டை கடும் போராட்டத்திற்கு பின் நடால் கைப்பற்றினார். அதன்பின் அடுத்தடுத்த செட்களை அவர் மிக எளிய முறையில் கைப்பற்றினார். அவர் 7-6, 6-4, 4-1 என்ற செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். டேனில் மெட்வடேவ் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் நடாலை எதிர்த்து விளையாடுகிறார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்