செருப்பு’ சின்னம் அழகிய தமிழகம் கட்சி தொடக்கம்…!

செருப்பு’ சின்னம் அழகிய தமிழகம்
கட்சி தொடக்கம்

ஈரோடு சத்தியமங்கலத்தில் கிராம புறங்களிலிருந்து இருந்து புதிய கட்சி துவங்கியுள்ளது. கட்சியின் கொடி , சின்னம், கொள்கைகள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் பெயர் (அழகிய தமிழகம்) மட்டும் விவசாயி ஒருவர் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது . அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும், அழகிய தமிழகம் (அதம்) கட்சியின் சின்னமான செருப்பு சின்னம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கட்சி தலைவர் சசி மோடி தெரிவித்துள்ளார். மேலும் அழகிய தமிழகம் (அதம்) கட்சியின் துணைத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ஞானசேகரன், துணைச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் கார்த்திக் ஆகியோரை அதம் தலைவர் சசிமோடி அறிமுகப்படுத்தினார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்