அருள்மிகு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமி திருவீதி விழா மற்றும் உறியடி நிகழ்ச்சி

கரூர் அருள்மிகு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமி திருவீதி விழா மற்றும் உறியடி நிகழ்ச்சி

கரூர் மேட்டுத் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உற்சவர் ரங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சுவாமியை வண்ண மலர்களால் அலங்கரித்த பின் ஆலய மண்டபத்தில் கொலுவிருக்க செய்தனர்.பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, தீபம் & கும்ப ஆர்த்தியுடன் கற்பூர தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய பிறகு சுவாமி ரங்கநாத பெருமாள் சிறப்பு வாகனத்தில் அமரச்செய்து மேள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேட்டு தெருவில் சுவாமிக்கு பக்தர்கள் தேங்காய் ,பழம் வைத்து நேத்திக்கடன் செய்தபிறகு, உறியடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு ரங்கநாத சுவாமி உற்சவர் திருவீதி விழா மற்றும் உறியடி விழாவில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை மனமுருகி வேண்டி சென்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ரங்கநாதசுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்