கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் குருபூஜை விழா

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்றான அருள்மிகு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மன்னர் புகழ்சோழ நாயனார் குருபூஜை விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு புகழ்சோழர் நான்கு கால் மண்டபத்தில் வீற்றிருக்கும் புகழ் சோழருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், பால், தயிர்,இளநீர், திருமஞ்சள் பொடி , அரிசி மாவு ,சந்தனம், சீவக்காய் ,மஞ்சள், திருமஞ்சள், விபூதி போன்ற வாசனை பொருட்களால் புகழ்சோழ மன்னனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், வண்ணப் பூக்களால் கம்பீரத் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின் தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டும், நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டும் கற்பூர தீபாராதணையுடன் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயத்தில் வந்து புகழ்ச்சோழர் நாயனாரின் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றுச் சென்றனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் ஸ்ரீ புகழ்ச்சோழர் ஆன்மீக நிர்வாகிகள் சார்பாக மிக சிறப்பாக செய்திருந்தனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்