அருள்மிகு ஸ்ரீவிஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி விழா

கரூர் அருள்மிகு ஸ்ரீவிஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி விழா

கரூரில் மிகவும் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகருக்கு ஆவணி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, அரிசி மாவு, மஞ்சள், திருமஞ்சள் ,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், கரும்புச்சாறு, இளநீர், எலுமிச்சைச்சாறு ,சாத்துக்குடிசாறு, சீவக்காய், விபூதி ,சந்தனம் மற்றும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் சுவாமி கணநாதனை தங்க கவசத்தில் அலங்கரித்த பின் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு உற்சவர் சிலை & மூலவர் கணநாதனுக்கும் கற்பூர தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆவணி மாதம் மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் சுவாமியை மனமுருகி வழிபட்டு சென்றனர். விழா ஏற்பாட்டை அருள்மிகு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்