அருள்மிகு ஸ்ரீ பால கணபதிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

 

கரூர் கேவிபி நகர் அருகில் உள்ள கணேசா நகரில் குடி கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால கணபதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது .அதன்படி சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து இரண்டு கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு கலசத்திற்கு கற்பூர தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் கலசத்தில் தலையில் சுமந்தபடி மேளதாளங்கள் முன்செல்ல கோபுர கலசம் வந்தடைந்தனர். பின்னர் கோபுரத்திற்கு மாலை அணிவித்து சந்தனப்பொட்டு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது .பிறகு கலசத்திற்கு பட்டாடை உடுத்தி சந்தனப்பொட்டு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மூலவரான ஸ்ரீ பால கணபதி யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது .

பின்னர் கூடியிருந்த அனைத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு கற்பூர தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ பால கணபதி மகா அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் வருகை தந்து சுவாமி கணநாதன் மனமுருகி வழிபட்டு சென்றனர். பின்னர் அனைவருக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ பால கணபதி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர் .

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்