அருள்மிகு ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் 81 ஆம் வருட உறியடி உற்சவ விழா

 

 

கரூர் பெரிய குளத்துப்பாளையம் அருள்மிகு ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் 81 ஆம் வருட உறியடி உற்சவ விழா

கரூர் பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ருக்மிணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் 81 ஆம் வருட உறியடி உற்சவ விழாவை முன்னிட்டு சுவாமி உற்சவரை சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரித்த பின் ரத வாரத்தில் கொலுவிருக்க செய்தனர்.சின்ன குளத்துப்பாளையம் பகவதி அம்மன் ஆலயத்தில் உள்ள கணபதிக்கும், ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வண்ண, வண்ண பூக்களால் அலங்கரித்து பின் ஆலயத்தில் முன்பாக உறியடி நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பின்னர் சின்ன குளத்துப்பாளையம் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய முன்பாக சுவாமி திருவீதி உலா வந்தது பிறகு சுவாமிக்கு பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து தங்களுடைய நேர்த்திக் கடனை செய்தனர்.

பின்னர் சுவாமி ருக்மணி சமேத பண்டரிநாதன் கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிறகு கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தார். அருள்மிகு ருக்மணி சமேத பண்டரிநாதன் 81 ஆவது வருட உறியடி திருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வந்து சுவாமியை மனமுருகி வேண்டி சென்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்