அத்திவரதர் வைபவத்தை மேலும் நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் முறையீடு

அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. சயனகோலத்தைத் தொடர்ந்து, நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அத்திவரதர் வைபவம் வரும் 16-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 17-ஆம் தேதி மீண்டும் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார்.


இந்நிலையில் அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிகப்படியான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளதால் மேலும் 48 நாட்கள் அத்திவரதர் வைபத்தை நீட்டிக்கோரி வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என வழக்கறிஞர் பிரபாகரனுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்