புறப்படும் நேரத்தில் கோளாறை கண்டுபிடித்த விமானி: பத்திரமாக திரும்பியது இண்டிகோ!

புறப்படும் நேரத்தில் விமானத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டுபிடித்ததால், அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த நிதின் கட்கரி உட்பட பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு 6E 636 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமான ம் புறப்படுவதற்காக ரன்-வேக்கு சென்றது. பறப்பதற்குத் தயாராக இருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப் பதைக் கண்டார் விமானி.

உடனடியாக இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த அவர், விமானத்தை ரன்வேயில் இருந்து விமானங்களை நிறுத்துமிடத்துக்கு மீண்டும் கொண்டு வந்தார்.  இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்தில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட அனைத்துப் பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சரியான நேரத்தில் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்