இளம்பெண் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பேனர் சரிந்து இளம்பெண் உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபாஸ்ரீ (வயது 23). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபல் மீது பள்ளிகரனை போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகள் மெத்தனமே காரணம் என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இளம்பெண் சுபாஸ்ரீ உயிரிழப்பு சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. மேலும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்