அண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட் – சத்திஸ்கர் பாசப்போர்


சத்திஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான சண்டையில் போலீஸ் அண்ணனும் மாவோயிஸ்ட் தங்கையும் நேருக்குநேர் மோதிக் கொண்டுள்ளனர்.

சத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுடன் போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்தச் சண்டையின் போது காவலர் வெட்டி ராமா அங்கு இருந்துள்ளார். ஆனால் இவருக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டுகளில் ராமாவின் தங்கை வெட்டி கன்னி சண்டையிட்டுள்ளார்.

இந்தச் சண்டையின் போது மாவோயிஸ்ட்டுகளை நோக்கி உடன் இருந்த போலீசார் சுட்டுள்ளனர். இந்தச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். எனினும் காவலர் வெட்டி ராமாவின் தங்கை மட்டும் துப்பாக்கிச் சூட்டிலிருந்து  தப்பியுள்ளார்.

வெட்டி ராமா மற்றும் அவரது தங்கை வெட்டி கன்னி ஆகிய இருவரும் மாவோயிஸ்ட்டுகளாக சத்திஸ்கரில் போராடி வந்தனர். பின்னர் தனது மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் வெட்டி ராமா அங்கிருந்து வந்து காவல்துறையில் சேர்ந்துள்ளார். இதன்பின்னர் இவர் தனது தங்கையான வெட்டி கன்னிக்கு மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பிரிந்து வருமாறு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.   எனினும் இவரது தங்கை வெட்டி கன்னி திரும்பி வராமல் தொடர்ந்து மாவோயிஸ்டாகவே போராடி வருகிறார்.

 

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்