ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கியது.

மத்திய அரசின் வெளியுறவு விவகாரம் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சகங்கள் சார்பில் , ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடக்க விழா இன்று காலை நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றினர். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் டி.அருண் பிரசாத் வரவேற்றார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி தொடங்கி வைத்தார்.

தென் பிராந்திய அஞ்சல் சேவை இயக்குநர் கே.சோமசுந்தரம், தென் பிராந்திய அஞ்சல் துறை தலைவர் முனைவர் உபேந்தர் வெண்ணம் ஆகியோர் பேசினர். மதுரை மண்டல துணை பாஸ்போர்ட் அலுவலர் பால்ரவிந்திரன் நன்றி கூறினார். ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன், அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன்,
விஜய கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கிளையாக தினமும் காலை 10 மணிக்கு செயல்படும் இச்சேவை மையத்தில் அஞ்சலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் பணியாற்றுவர். இம்மையத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கலாம். தேதி காலாவதியாகும் பாஸ்போர்ட்களை புதுப்பிக்கலாம். புதிய பாஸ்போர்ட் கோருவோரின் விண்ணப்பம் மதுரை மண்டல அலுவலத்திற்கு அனுப்பப்பட்டு, போலீசாரின் உரிய விசாரணைக்கு பின் விண்ணப்பதாரரின் வீட்டு முகவரிக்கு மதுரை அலுவலகம் மூலம் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்