இன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை – கிராமுக்கு ரூ 38 உயர்வு

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 38 உயர்ந்து ஒரு கிராம் 3,718 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம், ரூ.304 உயர்ந்து ரூ.29,744-க்கு விற்பனையாகிறது.கடந்த 25 நாட்களில் தங்கள் விலை சவரனுக்கு ரூ.3,264 அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்