சல்மான், ஷாரூக் இல்லை: மீண்டும் முதலிடம் பிடித்த சன்னி லியோன்!

கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலங்களின் பட்டியலில் சன்னி லியோன் மீண்டும் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தி சினிமாவில் நடித்து வரும் சன்னி லியோன், தமிழில் ’வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அடுத்து வீரமாதேவி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் முதல் வாரம் கூகிளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். பிரதமர் மோடி, சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோரைப் பின்னுக்கு தள்ளி, இந்த இடத்தை அவர் பெற்றுள்ளார்.

பெரும்பாலானோர், அவரது வீடியோ, அவரது வாழ்க்கை வரலாற்றுத் தொடரான ‘கரஞ்சித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’ ஆகியவற்றைத் தேடியுள்ளனர். மணிப்பூர், அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்கள் அதிகம் பேர் தேடியுள்ளனர்.

இதுபற்றி சன்னி லியோன் கூறும்போது, ‘’எனது டீம், இதுபற்றி தெரிவித்தது. எப்போதும் எனக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. இது எனக்கு சிறந்த உணர்வை தந்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் சன்னிலியோன் முதலிடத்தில் இருந்தார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்