மது போதையில் நடிகையை அடித்து உதைத்த கணவர் கைது

இந்தி நடிகையை மதுபோதையில் அடித்து உதைத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. நாகின் உட்பட பல்வேறு இந்தி டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து திருமணம் செய்தார். ஒன்பது வருடத்துக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு பாலக் என்ற மகள் இருக்கிறார்.

பின்னர் ஸ்வேதா, நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2013 ஆம் ஆண்டு மறுமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அபினவ், தன்னையும் தன் மகளையும் மதுபோதையில் தினமும் அடித்து துன்புறுத்துவதாக மும்பை காந்திவிலி காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் செய்திருந்தார். புகாரை விசாரித்த போலீசார், அபினவ்வை கைது செய்துள்ளனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்