நடன பயிற்சியாளரான லட்சுமி மேனன்!


கும்கி, பாண்டிய நாடு, கொம்பன் என வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையான லட்சுமி மேனன் சிலகாலமாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவர் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- எனக்கு நடனம் பிடிக்கும். அதைப் பற்றிதான் படிச்சேன்.

என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நடனம் பற்றி புதுப்புது வி‌ஷயங்களைக் கத்துக்கிட்டுதான் இருப்பேன். வீட்டிலேயே நான் சில குழந்தைகளுக்கு நடன வகுப்பு எடுத்துக்கிட்டிருக்கேன்.

என்னோட மாணவர்களின் அரங்கேற்றம் நிகழ்ச்சியை பார்க்கணும்னு ஆசைப்படுறேன். நிறைய கதைகள் வந்தன. ஆனா, எந்தக் கதையும் எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. ஏதோ கதைகள் வருது; படம் பண்ணலாம்னு நினைக்கிற ஹீரோயின் நான் இல்லை. சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கிறது உண்மைதான்.

கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன். இந்த பிரேக் நல்லாயிருக்கு. இப்போ தேவைப்படுற ஒண்ணாவும் இருக்கு. சினிமாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்