நடிகர் சூர்யாவின் 39 வது படம்: இன்று மாலை அடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா-இயக்குநர் ’சிறுத்தை’ சிவா இணையும் படம் பற்றிய அப்டேட் இன்று மாலை 5.40 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சிவா, கார்த்தி நடித்த ’சிறுத்தை’யை அடுத்து அஜீத் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார்.

இதையடுத்து அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். சூர்யாவின் 39-வது படமான இதை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிற து. இதுபற்றிய தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில், இயக்குநர் சிவாவுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, அந்தப் படம் குறித்த அப்டேட்டை இன்று மாலை 5.40 மணிக்கு வெளியிடப்போவதாக ஸ்டூடியோ கிரீன் தெரிவித்துள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்